இனிப்பான செய்தி சொன்னார் பாலசந்திரன்... தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழையாம்
தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
கோடை காலமான தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் வெப்பம் தகித்து வருகிறது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியே தலை காட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை சென்னையில் பெய்த மழை குளிர்ச்சியை தந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தென் தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில் தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கனமழை.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக சின்னக்கல்லூரில் 13 செ.மீ. மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. தேவாளா, கூடலூர், பெரியார் அணை, வால்பாறை தலா 9 செ.மீ. மழை பதிவானது என்றார்.












Click it and Unblock the Notifications