குமரிக்கடலில் புதிய மேலடுக்குச் சுழற்சி: தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்- ரமணன்
சென்னை: குமரிக்கடல் அருகே இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கியது. முதலில் விட்டு, விட்டு பெய்த மழை நவம்பர் மாதம் மற்றும் இம்மாதம் முதல் வாரத்திலும் வெளுத்து வாங்கியது. வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் எதுவும் இன்றி சென்னையில் வெயில் அடிப்பதால் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்தநிலையில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன், குமரிக்கடல் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு உருவாகிய மேலடுக்கு சுழற்சி நகர்ந்து மாலத்தீவு அருகே நிலை கொண்டிருந்தது. இது தற்போது லட்சத்தீவு நோக்கி நகர்ந்துள்ளது. இந்தநிலையில் குமரிக்கடல் அருகே இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக மேலும் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றார் ரமணன்
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் வால்பாறையில் அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தளவாடி, தேவாலா, சின்னக்கலார் பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications