கட்சி கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து விலகியதாக கருத நேரிட்டது: சபாநாயகர் தனபால்
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் புகார் கூறி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் 18 எம்.எல்.ஏக்களும் கட்சியில் இருந்து விலகியதாகவே கருத நேரிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் என சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தனபால் கூறியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 18 எம்.எல்.ஏக்களும் ஊடகங்களில் பேட்டி தந்தனர். சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக் கொள்ள பொய் பேட்டியளித்தனர்.

கட்சியில் இருந்து விலகியதாக...
இப்படி கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து 18 எம்.எல்.ஏக்களும் விலகியதாகவே கருத நேரிடுகிறது. புதுச்சேரியில் தங்கியிருந்து விட்டு கட்சி மற்றும் நண்பர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக பொய் கூறியுள்ளனர்.

பொய் தகவல்
என்னிடம் அளித்த விளக்க அறிக்கையில் பொய்யான தகவலைத் தெரிவித்தனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமீது பொய்யாக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

பதவி தந்தது பிடிக்கவில்லை
ஓபிஎஸ் மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்கு பதவி தந்தது பிடிக்காமல்தான் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஜக்கையனைப் பொறுத்தவரையில் அவர் அளித்த விளக்கம் ஏற்பட்டது.

ஜக்கையன் ஆதரவு
அவர் தம்முடைய விளக்கத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க தாம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாக கூறியிருந்தார். ஆகையால் ஜக்கையன் அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டேன். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தொடர தாம் ஆதரவு தருவதாகவும் ஜக்கையன் கூறினார்.
இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications