கொறடா பரிந்துரையால் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் உடனே தகுதி இழப்பார்களா?
கொறடா பரிந்துரையால் தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் உடனே தகுதி இழப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: கொறடா பரிந்துரையால் தற்போது தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் உடனே தகுதி இழப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபையில் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் கட்சிகளின் கொறடா உத்தரவு மிக முக்கியமானது. கட்சிகளின் கொறடா என்பவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில்தான் எம்.எல்.ஏக்கள் ஒரு தீர்மானத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்க முடியும்.

சட்டசபைக்குள் மட்டும்..
இந்த கொறடா உத்தரவு என்பது சட்டசபைக்குள் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். சட்டசபை கூடாத நேரங்களில் வெளியிடங்களில் இந்த கொறடா உத்தரவு செல்லாது.

உடனே தகுதி நீக்கம் இல்லை
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கொறடாவுக்கு அவர் சார்ந்த கட்சியின் பொதுச்செயலர்தான் என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என உத்தரவிடுவார். ஆகையால் தற்போதைய நிலையில் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெற்ற 19 அதிமுக எம்.எல்.ஏக்களை உடனே தகுதி நீக்கம் செய்ய முடியாது என்றே கூறப்படுகிறது.
|
முதல் கட்ட எச்சரிக்கை
அப்படி தகுதி நீக்கம் செய்தால் சட்டசபை கூடாத நேரத்தில் கொறடா உத்தரவு தங்களை கட்டுப்படுத்தாது என 19 பேரும் நீதிமன்றம் செல்ல வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இது தினகரன் அணிக்கு தாவ நினைக்கும் எம்.எல்.ஏக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

விளக்கம் கேட்கலாம்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் விஜயன், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா ஆகியோரும் சட்டசபை கூடாத நேரத்தில் கொறடா உத்தரவு செல்லாது என்றே கூறியுள்ளனர். மேலும் கொறடாவின் பரிந்துரைப்படி 19 எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் மட்டுமே கேட்க முடியும் என்கிறார் சேடபட்டி முத்தையா.
-
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்!












Click it and Unblock the Notifications