மூன்று தொகுதி வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் கூட்டம்.. தமிழிசை மகிழ்ச்சி
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் 3 தொகுதிகளில் அதிக அளவு வாக்குப் பதிவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வரும் 3 தொகுதிகளில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகார் காரணமாக தஞ்சை, கரூர் மாவட்ட அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக உறுப்பினர் மரணம் அடைந்ததால் அங்கும் இன்று இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலபாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திருப்பரங்குன்றம், தஞ்சை மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளில் அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் இத்தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களித்தாக அறிந்து வருத்தம் அடைந்ததாகவும் அவர் கூறினார். இந்த தேர்தல் அமைதியாக நடந்து முடிய அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications