இவரை பார்த்து சந்தோஷப்பட கலாம் இல்லாமல் போய் விட்டாரே!

பாரா கிளைடரை சொந்தமாக தயாரித்துள்ளார் பழனியை சேர்ந்த இளைஞர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பவர் பாரா கிளைடரை உருவாக்கிய கிராமத்து இளைஞர்- வீடியோ

    சென்னை: "எல்லாரும் வானத்துல பறக்கணும்னு ஆசைப்பட்டா முடியுமா?"-ன்னு பொதுவா நாம பேசிக்கொள்வோம்.

    ஆனால் வயலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ ஞானப்பிரகாசம் என்பவருக்கு சின்ன வயசிலே இருந்தே இந்த கேள்வி மனசுக்குள் பசைபோல ஒட்டிக் கொண்டது போலும். அதனால்தான் இன்னைக்கு யார் வேண்டுமானாலும் பறக்க உதவும் பவர் பாரா கிளைடரை உருவாக்கி இருக்கிறார்.

    பொதுவாக மலையிலிருந்து கீழே குதிப்பது, அல்லது மிக உயரமான இடத்திலிருந்து கீழே குதிப்பதற்காக பயன்படுத்தப்படுவதே இந்த பாரா கிளைடர் என்பது. இதனை போலீஸார், தீயணைப்பு வீரர்கள்தான் அதிகமாக பயன்படுத்துவார்கள்.

    பவர் பாரா கிளைடர்

    பவர் பாரா கிளைடர்

    ஏதாவது அவசர ஆபத்துக்கு என்று பயன்படுத்தப்பட்டு வந்த பாராகிளைடரை அனைவருமே குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களும் விரும்பக்கூடிய ஒன்றாக மாற்றிவிட்டார் ஞானபிரகாசம். இத்தனைக்கும் ஞானப்பிரகாசம் படித்தது 8-வது வகுப்பு வரைக்கும்தான். குடும்ப தொழிலோ வெறும் விவசாயம்தான்.

    ஆர்வம் மிகுதி

    ஆர்வம் மிகுதி

    சின்ன வயசிலிருந்தே மேலே பறக்கும் விமானத்தை போலவே தானும் இதுபோல ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டே இருந்தது ஞானப்பிரகாசத்துக்கு. அப்போது தோன்றியதுதான் இந்த பாரா கிளைடர் செய்யும் ஆசை. ஒரு பக்கம் விவசாயம், இன்னொரு பக்கம் கான்ட்ராக்ட் வேலை என செய்தாலும், இதற்கு நடுவில் இழுத்துப் போட்டுக் கொண்டு ஆர்வத்துடன் செய்து பார்த்ததுதான் இந்த பாராகிளைடர்.

    தோல்வி.. தோல்வி..

    தோல்வி.. தோல்வி..

    இது சம்பந்தமான படிப்பினை ஞானசம்பந்தம் படிக்கவில்லை என்றாலும் புத்தகங்கள் படித்தும், யூ-ட்யூப் வீடியோக்களை பார்த்துமே இந்த பாரா கிளைடர் செய்வதை கற்றுக் கொண்டார். அதேபோல சொந்தமாக செய்யவும் முயன்றார். பலமுறை தோல்வி... தோல்வி... ஒன்றிரண்டு வருடங்கள் அல்ல, கிட்டத்தட்ட 12 வருடங்கள் விடா முயற்சியை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

    வெறும் ரூ.50 ஆயிரம்

    வெறும் ரூ.50 ஆயிரம்

    கடைசியில் ஒருவழியாக சரியாக செய்து முடித்துவிட்டார். ஃபாரீன் டெக்னாலஜியும், இன்டியன் டெக்னாலஜியும் ஒன்று சேர்ந்த கலவைதான் இந்த பாராகிளைடர். ஞானப்பிரகாசம் கண்டுபிடித்துள்ள இந்த பவர் பாராகிளைடர் விலை வெளிநாடுகளில் எவ்வளவு தெரியமா? 15 லட்சம் ரூபாய்க்கு மேலாம். ஆனால் நம்ம ஞானப்பிரகாசம் வெறும் 50 ஆயிரம் ரூபாயிலேயே இதை செஞ்சி முடிச்சிட்டார்.

    15 ஆயிரம் அடி

    15 ஆயிரம் அடி

    பொதுவாக யார் வேண்டுமானாலும் வானத்தில் ஏதாவது உதவியுடன் பறக்க உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு அளவு இருக்கிறது. 500 அடிக்குமேல் பறந்தால் டிராஃபிக் கன்ட்ரோல் விதிமுறைகளின்படி அது குற்றமாகிவிடும். அனுமதியும் கிடையாது. ஆனால் அதற்கு மேலும் பறக்க வேண்டும் என்பதே ஞானசம்பந்தத்தின் ஆசை. அதற்கேற்ற தொழில்நுட்பம் நிறைந்த கருவிகளை வாங்கி பொருத்தினார். உரிய அனுமதி வாங்கி 8 ஆயிரம் அடி வரை பாரா கிளைடரில் உயர பறந்தார். தற்போது 10 ஆயிரம் 15 ஆயிரம் அடி அளவுக்கு பறக்கக்கூடிய அளவுக்கு பவர் பாரா கிளைடரை உருவாக்கி இருக்கிறார். இதில் 3 பேர் உட்கார்ந்து கொள்ளலாமாம்.

    பாராசூட் உண்டு

    பாராசூட் உண்டு

    திடீரென்று பறக்கும்போது, பவர் பாராகிளைடரில் பிரச்சனை, கோளாறு என்றால் கூடவே சேஃப்டிக்காக வைத்திருக்கிறார் பாராசூட்!! இதை பெரும்பாலும் வாங்கி பயன்படுத்துவது மாணவர்கள்தானாம். ஏனென்றால் ப்ரைம் பாரா கிளைடரை வைத்து வெளிநாடுகளில் விளையாட்டு போட்டிகள் எல்லாம் நடத்துகிறார்கள். குறிப்பாக தாய்லாந்து. அங்கு வருடா வருடம் பாராகிளைடர் வைத்து ஒரு பந்தயமே நடக்குமாம். இது ஒரு சாகச விளையாட்டு என்பதால் இதில் கலந்து கொள்ள நினைக்கும் மாணவர்கள் ஞானப்பிரகாசத்திடம் வந்து உரிய பயிற்சி எடுத்து கொண்டு, அந்த பவர் பாரா கிளைடரை வாங்கி செல்கிறார்கள்.

    முறையான தகவல்

    முறையான தகவல்

    அதுமட்டுமல்ல, காவல்துறை தங்கள் போலீசாருக்கு பவர் பாரா கிளைடர் குறித்து பயிற்சி கொடுத்தாலும், ஒருசில போலீசார் ஞானப்பிரகாசத்திடம் தனிப்பட்ட முறையில் வந்து பயிற்சி எடுத்து கொண்டு போகிறார்களாம். இதனை தங்கள் வீடுகளில் மிக எளிமையாக வைத்து கொள்ள முடியுமாம். எப்போது வேண்டுமானாலும் பறக்கவும் செய்யலாம். ஆனால் அப்படி பறக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு கண்டிஷன். பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரு தகவலை சொல்லிடணும்.

    அரசு உதவ வேண்டும்

    அரசு உதவ வேண்டும்

    இதுகுறித்து ராஜ.ஞானபிரகாசம் நம்மிடம் சொல்லும்போது, "மாணவர்களிடையே இதை கொண்டு செல்வதே என் நோக்கம். என்னை போல ஆங்காங்கே சிலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுட்டு வர்றாங்க. இதை செயல்படுத்த காவல்துறை எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. ஆனாலும் சில இடங்களில் இதுபற்றிய விவரம் தெரியாத காரணத்தினால், அனுமதி தர மறுக்கிறார்கள். அவர்களும் இதை புரிந்து கொண்டு எங்களுக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இதுபோன்ற பவர் பாராகிளைடுகளை செய்யவும், இதுகுறித்த பயிற்சியினை விரிவுபடுத்தவும் தமிழக அரசு உதவினால் நன்றாக இருக்கும்" என்கிறார்.

    உயர்ந்து விட்டார்

    உயர்ந்து விட்டார்

    எப்படியோ, இன்னும் கொஞ்ச காலத்தில் நம்ம நாட்டில் வெறும் வாகனங்கள் ரோடெல்லாம் நிறைஞ்சி வழிய போகுது. நெரிசலிலிருந்து தப்பிக்க கோடி கோடியாக பணத்தை கொட்டி.... ட்ரோன்கள், பறக்கும் கார்கள் போன்றவற்றை தயாரிக்க பல நிறுவனங்கள் களத்தில் இறங்கிவிட்டன. இந்நிலையில், நம் ஞானப்பிரகாசம் யார் உதவியும் இல்லாமல் தன்னந்தனியாளாக நின்று, பவர் பாராகிளைடரை உருவாக்கி "உயர்ந்து" விட்டார்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+