ஏழைகளின் சின்னம்னு சொல்லியே 50 வருஷமாக மக்களை ஏழையாகவே வைத்த திமுக, அதிமுக: சீமான் பாய்ச்சல்
சென்னை: ஏழைகளின் சின்னம் இரட்டை இலை, உதயசூரியன் என்று 50 ஆண்டுகாலமாக கூறி மக்களை ஏழையாகவே திமுகவும் அதிமுகவும் வைத்துவிட்டன என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சாடியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று சீமான் கூறியதாவது:
50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்த கட்சிகள் இதுவரை மக்களின் ஏழ்மை நிலையை போக்க எந்தவித முயற்சியும் செய்யவில்லை. ஏழ்மை நிலையை போக்காத எவ்வித முயற்சியும் எடுக்காத அரசுகள் இனி எதற்கு?

மக்களின் வாழ்க்கை தரம் மேலும் மேலும் வீழ்ந்து வருகிறதே தவிர எவ்வித முன்னேற்றமும் ஏறபடவில்லை. தொழில்துறை நலிந்துள்ளது.
இலவசங்களைக் கொடுத்து மக்கள் முன்னேறி விடாமல் இருக்க இரு கழகங்களும் கண்ணும் கருத்துமாக வேலை செய்கின்றன. டாஸ்மாக்கை கொண்டு வந்து நாட்டையும் நாட்டு மக்களையும் ஒட்டுமொத்தமாக அதிமுகவும் திமுகவும் சீரழித்துவிட்டன.
மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர் விவசாயம் நலிந்து விட்டது, கனிம வளக் கொள்ளை, அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் ஊழல் என்று நாட்டையே குட்டி சுவராக்கிவிட்டனர்
மக்கள் இன்று அனைத்திற்கும் யாரையாவது சார்ந்து வாழும் நிலையையும் சுய சார்பற்றவர்களாக வைத்திருப்பதையே இரு கழகங்களும் ஆர்வமாக உள்ளன.
இன்று மக்களிடமும் வாக்கு கேட்டு செல்லும் திமுகவும் அதிமுகவும் ஏழைகளின் சின்னம் உதய சூரியன் ஏழைகளின் சின்னம் இரட்டை இலை என்றுதான் கூறி வாக்கு சேகரிக்கின்றனர். 50 ஆண்டுகளாக நாட்டை இவர்கள் சிறப்பாக ஆண்டிருந்தால் நாட்டை முனேற்றப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தால் இன்றும் போய் மக்களிடம் ஏழைகளின் சின்னம் என்று வாக்கு கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
ஏழைகளின் சின்னம் தங்களது சின்னம் என்று வாக்கு கேட்பதன் மூலம் ஏழ்மை நிலையை இன்னும் ஒழிக்கவில்லை என்பதே அவர்களது வாக்குமூலம். அதனால்தான் மக்கள் இன்று இந்த இருகட்சிகளையும் புறக்கணித்து விட்டு மாற்றத்தை நாடுகின்றனர்.
50 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் ஏழ்மை நிலையை இன்னும் போக்க இயலவில்லை என்றால் இது போன்ற அரசுகள் இனிமேல் எதற்கு?.
இவ்வாறு சீமான் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications