தமிழகத்துக்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி விரைவில் நியமனம்
சென்னை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் விரைவில் மாற்றப்பட்டு புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.
தமிழகத்தின் தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் ஏற்கனவே இங்கு சட்டசபை பொதுத்தேர்தல், இடைத் தேர்தல்களை நடத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஒரேகட்டமாக தமிழகத்தில் லோக்சபா தேர்தலையும் அவர் நடத்தினார்.

தேர்தலுக்கு முந்தைய நாளில் 144 தடை உத்தரவை அவர் பிறப்பித்தார். இது ஆளும் கட்சி தவிர, மற்ற அனைத்துக் கட்சியினரையும் அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியது. இந்த தடை உத்தரவை ஆளும்கட்சியினர் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்ததாக, மற்ற எல்லா கட்சிகளுமே பிரவீன்குமாரை குற்றம் சாட்டின.
இது அவரை சோர்வுறச் செய்தது. எனவே வேறு பணிக்கு செல்லும் வகையில் தன்னை தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்தை கடந்த சில மாதத்துக்கு முன்பு பிரவீன்குமார் கேட்டுக்கொண்டார்.
இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் இசைவு தெரிவித்தது. எனவே அடுத்ததாக அந்த இடத்தில் நியமிக்கப்படும் நபரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கின.
இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டபடி, தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரும், உரிய பணிமூப்பு பெற்றவருமான 3 பெயர்களை தமிழக அரசு அனுப்பி வைத்தது. தற்போது அதில் ஒருவரை தேர்வு செய்யும் நடவடிக்கை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்தவாரம் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே, பிரவீன்குமார் வேறு பதவிக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications