துபாயில் வேலை செய்கையில் பார்வை பாதிக்கப்பட்ட தமிழர் சென்னை ஏர்போர்ட் போலீசில் புகார்
சென்னை: துபாயில் வேலை பார்க்கையில் ஏற்பட்ட விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்டதால் நாடு திரும்பியுள்ள தமிழக வாலிபரின் மனைவி சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவர் சென்னை விமான நிலைய போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது கணவர் பிரபு கணேசன் நீச்சல் குளத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்க்க கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துபாய்க்கு சென்றார்.

9 மாதங்களுக்கு முன் அங்கு நீச்சல் குளத்தில் ரசாயன மருந்து தெளிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவர் சற்று உடல்நிலை சரியானதும் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக துபாயில் இருந்து தகவல் வந்தது.
கடந்த 16ம் தேதி துபாயில் இருந்த திருச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் எனது கணவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் துபாயில் வழங்கப்படவில்லை. இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
அவரது புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications