For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்கிரஸை விட்டு வெளியேறி த.மா.காவில் ஐக்கியமாகிறார் டாக்டர் ராமதாஸ் சம்பந்தி 'கிருஷ்ணசாமி'

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய வரவாக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி அக்கட்சியில் இணைய உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தி கிருஷ்ணசாமி. இவரது மகன் விஷ்ணு பிரசாத், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர்.

கிருஷ்ணசாமிக்கு காங்கிரஸ் கட்சியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. இதனால் கட்சிப் பணியில் ஈடுபடாமல் ஒதுங்கியே உள்ளார்.

TNCC ex president Krishnaswamy to quit Congress?

அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை மிகக் கடுமையாக விமர்சித்தார் கிருஷ்ணசாமி. தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டியதுடன், மகன் விஷ்ணு பிரசாத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை வழங்க கோரினார்.

இதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள கிருஷ்ணசாமி விரைவில் காங்கிரஸை விட்டு வெளியேறி ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையக் கூடும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Tamil Nadu Congress Committee Former President M Krishnaswamy will join to TMC, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X