ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: காங்கிரஸ் கட்சி போட்டியில்லை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிப்பு
சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது என, அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்தத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல்வர் ஜெயலலிதாவும், டிராஃபிக் ராமசாமி உள்ளிட்ட 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
திமுக, மதிமுக, பாமக, தமாகா, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. பாஜக, தேமுதிகவின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், அனைத்து இந்திய அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் போட்டியிடுகிறார். அங்கு நடைபெறும் சட்டவிரோதமான சூழலை தடுத்திட தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு தாரளமாக பணம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications