திருநாவுக்கரசரின் 'செம' தில்.... நாங்களும் வருங்கால முதல்வர்தான்... திமுகவுடன் பகிரங்க மல்லுக்கட்டு
வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்து கலகத்தை தொடங்கியுள்ளார் திருநாவுக்கரசர்.
Recommended Video

சென்னை: திமுகவுடன் பகிரங்கமாக மல்லுக்கட்டும் வகையில் வருங்கால முதல்வரே என போஸ்டர் அடிக்க உத்தரவிட்டுள்ளாராம் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், ஒட்டும் ஒட்டாமலும்தான் கட்சியை நகர்த்தி செல்கிறார் திருநாவுக்கரசர். கூட்டணியில் ஒரே முதல்வர் வேட்பாளரான திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தன்னை முன்னிலைப்படுத்தும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டு வந்தார் திருநாவுக்கரசர்.

இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் மீது கடும்கோபம் கொண்டார் ஸ்டாலின். திருநாவுக்கரசர் தலைவராக இருந்தால் கூட்டணியில் காங்கிரஸ் நீடிப்பதை நாங்கள் பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்ப வைத்தார் ஸ்டாலின்.
இதனை காங்கிரஸ் சீரியசாகவே எடுத்துக்கொண்டது. ஆனாலும், தேர்தல் காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என அமைதியாகவே இருந்து வருகிறது காங்கிரஸ் மேலிடம்.
இந்த நிலையில், ஸ்டாலினோடு மறைமுகமாக மல்லுக்கட்டிய திருநாவுக்கரசர், தற்போது நேரடியாகவே மோதத் தொடங்கியுள்ளார். அதன் முதல்கட்டமாக, தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடிக்கும் தனது ஆதரவாளர்களிடம், 'வருங்கால தமிழக முதல்வர் ' என அழைக்கும் விதமாக போஸ்டர்கள், பேனர்கள் அடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளாராம் திருநாவுக்கரசர்.
அவரின் அந்த யோசனையை, குமரி மாவட்ட நிகழ்ச்சியிலிருந்து துவக்கியுள்ளார்கள் திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள். தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தி வரும் திருநாவுக்கரசர் வருகிற 12 ந்தேதி கன்யாகுமரி மாவட்டம் செல்கிறார்.
திருநாவுக்கரசரின் 'செம' தில்.... நாங்களும் வருங்கால முதல்வர்தான்... திமுகவுடன் பகிரங்க மல்லுக்கட்டு https://t.co/rKtKTVl8lR#Thirunavukkarasar #Congress pic.twitter.com/LUlshrw98r
— Oneindia Tamil (@thatsTamil) May 10, 2018
குமரி மாவட்ட ஆய்வுக்கூட்டத்துக்கு வரும் திருநாவுக்கரசருக்குத்தான் இப்படிப்பட்ட போஸ்டர் அழைப்பு. கலகத்தை உருவாக்க திட்டமிட்டுவிட்டார் திருநாவுக்கரசர். இந்த போஸ்டர் மேட்டர், ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications