இளங்கோவனுக்கு 66 வயது... 60 கிலோ கேக் வெட்டி கொண்டாடிய காங்கிரஸார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் 66வது பிறந்த நாள் இன்று சத்தியமூர்த்தி பவனில் பிரமாண்ட கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சுமார் 60 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டப்பட்டது. மூத்த தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு கேக்கை வெட்டி குழந்தைகளுக்கு வழங்கினார்.

TNCC president EVKS Elangovan turns 66 today

ப.சிதம்பரம் ஆதரவாளரான கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் இளங்கோவன் வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவில் மத்திய சென்னை காங்கிரஸ் தலைவர் ரங்கபாஷ்யம் ஏற்பாட்டில் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வில்லிவாக்கத்தில் உள்ள அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

புரசைவாக்கத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 500 பெண்களுக்கு இலவச புடவைகள் வழங்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+