'லாஸ்ட் மினிட்ல' மாறும், அரங்கேறும், வரும்... ஞானதேசிகன் திகில் பேச்சு!
சென்னை: மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து படைத்துள்ளது காங்கிரஸ். இந்த விழாவில் கலந்து கொண்டு பிரியாணி வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று பொடி வைத்துப் பேசினார்.
சென்னை தி.நகரில் ஜி.கே.வாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி 200 பெண்களுக்கு இலவச சேலைகளும், பொதுமக்களுக்குப் பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரியாணியை தனது கையால் வழங்கினார் ஞானதேசிகன். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இப்போதைக்கு எதையும் உறுதியாக கூறமுடியாது. ஆனால் தேர்தல் நெருங்கும் போது காட்சிகள் மாறும். பல நாடகங்கள் அரங்கேறும். அப்போது கூட்டணிகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும். காங்கிரஸ் அணிக்கு புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது என்றார்.
மாறும், அரங்கேறும், வரும்.. என்று ஞானதேசிகன் பேசுவது அப்படியே திகில் பட வசனம் போலவே இருக்கிறதே... கடைசி நேரத்தில் காங்கிரஸ் என்ன குண்டைப் போடப் போகிறதோ...
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications