மொத்தத்துல நீங்க தோத்துட்டீங்க... விஜயதாரணி அதிரடி!
சென்னை: தமிழக அரசு மொத்தத்தில் தோல்வியடைந்து விட்டது. அதன் பட்ஜெட் அதைத்தான் காட்டுகிறது என்று தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கூறியுள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அவர் கருத்து தெரிவி்க்கையில், தமிழக அரசுக்கு மத்திய பாஜக வழங்க வேண்டிய நிதி பெரும் அளவில் குறைக்கப்பட்டு உள்ளது என்பதை இந்த பட்ஜெட்டில் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மத்திய வரி வருவாயை குறைத்து விட்டது. மாநிலங்களில் செயல்படுத்தப்படும் தேசிய திட்டங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளன. என்றாலும் நாடாளுமன்றத்திலும், ராஜ்யசபாவிலும் மத்திய அரசை அ.தி.மு.க. ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை.
தமிழக அரசுக்கு, ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது. மொத்தத்தில் இந்த அரசு தோற்று விட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications