காங். தலைமைக்கு எதிராக மேலும் ஒரு வாசன் ஆதரவாளர் விலகல்- கோவை தங்கம் ராஜினாமா!

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கம் திடீரென விலகியுள்ளார். இவர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஞானதேசிகன் விலகியுள்ள நிலையில் 2வது வாசன் ஆதரவாளராக கோவை தங்கம் விலகியுள்ளார்.

TNCC treasurer Kovai Thangam resigns

இது தொடர்பாக கோவை தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோர் படத்துடன் கூடிய அச்சடிக்கப்பட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அட்டையை நிறுத்தி வைப்பது என்பது உள்நோக்கம் கொண்டது.வருத்தத்திற்குரியது.

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்த மறைந்த தலைவர்களின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான அரசியல் முன்னுதாரனத்தை ஏற்படுத்துவது சரியல்ல.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவரின் ராஜினாமா மற்றும் தொண்டர்களின் கொந்தளிப்பிற்கு பின்பே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் அறிக்கை வெளியிடுவது மறைந்த தலைவர்களுடைய புகழுக்கு உகந்ததல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் மற்றும் தமிழகத்தில் மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் காட்டி வழியும், அவர்களின் ஆசியும் இல்லாமல் காங்கிரஸ் கட்சி இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

காங்கிரஸ் கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களை ஞானதேசிகன் அவர்கள் பிரதிபலித்திருக்கிறார்கள். எனவே ஞானதேதிகன் அவர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று தனது அறிக்கையில் கோவை தங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் நேற்று திடீரென விலகியது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜினாமா குறித்து விளக்கம் அளித்த அவர், கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில் காமராஜர், மூப்பனார் பெயர்களை போடக்கூடாது என்று கட்சி மேலிடம் கூறியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கம் திடீரென விலகியுள்ளது அக்கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பொருளாளர் பதவியை துறந்த கோவை தங்கம் ஜி கே வாசனின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாசனை முதல்வராக்க போஸ்டர் இயக்கம் நடத்தியவர்

காங்கிரஸ் பொருளாளர் பதவியை துறந்த கோவை தங்கம் ஜி கே வாசனின் தீவிர ஆதரவாளர். ஜி.கே.வாசனை 2016 தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க கோரி போஸ்டர் இயக்கம் நடத்தியவர் கோவை தங்கம்.

சென்னையில் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தியதுடன் தமிழகம் முழுவதும் அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+