மாறிப்போனதா வேட்பாளர் பட்டியல்? ஜி.கே.வாசனுடன் ஆலோசனையில் ஞானதேசிகன்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் வாசன் ஆதரவாளர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தலைமை அளித்த இறுதி பட்டியல் மாறியது குறித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனுடன், ஞானதேசிகன் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து அக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் கட்சி தலைமையிடம் ஒப்படைத்து இருந்தார். இந்நிலையில் வியாழனன்று தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.

மாறிப்போன வேட்பாளர்
இந்த பட்டியலில், சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமாள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், கட்சி மேலிடத்திடம் ஞானதேசிகன் வழங்கிய இறுதி வேட்பாளர் பட்டியலில் சிதம்பரம் தொகுதிக்கு மணிரத்தினம் பெயர் இடம் பெற்று இருந்ததாம்.

தொண்டர்கள் போராட்டம்
இதையடுத்து, சிதம்பரம் தொகுதி வேட்பாளரை மாற்றக்கோரி சத்திய மூர்த்தி பவனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல் மேலும் சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு இருப்பதாகவும், வாசன் ஆதரவாளர்களை திட்டமிட்டு நீக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பட்டியல் மாறியது எப்படி?
தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு இருப்பதாக ஞானதேசிகன் பகிரங்கமாக அறிவித்தார். இந்த உள்குத்து வேலையில் ஈடுபட்டவர்கள் யார்? என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

வாசனுடன் ஆலோசனை
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தலைமையிடம் புகார்
இந்த ஆலோசனையின் போது, இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருந்தவர்களின் பெயர்கள், கட்சி மேலிடத்தில் நடந்த விவாதங்கள் பற்றியும், பட்டியல் எவ்வாறு மாறி இருக்கும்? என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த உள்ளடி வேலையில் ஈடுபட்டவர்கள் பற்றி கட்சி மேலிடத்திடம் புகார் செய்யவும் அவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications