ஊதிய உயர்வு: மின்வாரிய தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது

ஊதிய உயர்வை வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மின்வாரிய தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடங்கியது- வீடியோ

    சென்னை: ஊதிய உயர்வு வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் மின்வாரிய தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் மின்விநியோகம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    மின்வாரியத் தொழிலாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வலியுறுத்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

    TNEB Employees strike begin today

    ஆனால் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

    இதன்படி இன்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது. சுமார் 40,000 ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் தமிழகத்தில் மின்விநியோகம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மின்கட்டணம் செலுத்தும் மையங்கும் இயங்காது என்பதால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+