கரூர் டி.என்.பி.எல். ஆலை கழிவுநீர் தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி
கரூர்: கரூர் டி.என்.பி.எல். ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக பலியானார்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய பேப்பர் தயாரிக்கும் ஆலையாக கரூர் அருகே உள்ள காகிதபுரத்தில் இருக்கும் டி.என்.பி.எல். தொழிற்சாலை செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையை முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். துவக்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை நல்ல லாபத்தில் இயங்கி வரும் அரசு நிறுவனத்தில் முதன்மையாக விளங்கி வருகின்றது.
ஜான், சுரேஷ், அந்தோனி ஆகிய மூன்று பேர் இந்த காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். நேற்று, கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் ஏற்பட்ட குழாய் அடைப்பை ஜான் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தொட்டியின் மேல் பகுதியில் இருந்து கழிவு நீருக்குள் தவறி விழுந்துவிட்டார்.
உடனே அருகில் இருந்து சுரேஷ், அந்தோனி ஆகியோர் ஜானை கழிவு நீருக்குள் இறங்கி வெளியில் மீட்டனர். இதில் ஜானுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும் சுரேஷ், அந்தோனி ஆகிய இரண்டு பேருக்கும், கை, கால்பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்ட போது ஜான் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications