இந்து சமய அறநிலையத் துறையில் வேலை காத்திருக்கு: டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிப்பு
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணிக்கு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு தேதி அறிவித்துள்ளது.
சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை-3ல் 29 காலிப் பணியிடங்கள் மற்றும் செயல் அலுவலர் நிலை-4ல் 49 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

செயல் அலுவலர் நிலை 3 பணியிடங்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெறுகிறது. செயல் அலுவலர் நிலை 4 பணியிடங்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் (முதல் தாள்) மற்றும் பிற்பகலில் (இரண்டாம் தாள்) தேர்வு நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24-ம் தேதி ஆகும். வங்கிகள் மூலம் தேர்வுக்கட்டணத்தை டிசம்பர் 27-ம் தேதிக்குள் செலுத்தவேண்டும். இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித்தனியாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வு மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் குறித்த மேலும் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications