"குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு தேதிகள் தேர்தலால் மாற்றம்-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாராளுமன்ற தேர்தல் எதிரொலியாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1, குரூப் 2 தேர்வுகள் தள்ளிவைக்கப் பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 26 ஆம் தேதி நடக்க இருந்த குரூப் 1 தேர்வை ஜூலை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. அதுபோல மே மாதம் 18 ஆம் தேதி நடத்த இருந்த குரூப் 2 ஏ தேர்வு, தேர்தல் காரணமாக ஜூன் 29 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளை தேர்வாணையம் நடத்தி வருகிறது. குரூப் 2 ஏ தேர்வு என்பது நேர்முகத்தேர்வு அல்லாத தேர்வாகும்.

குரூப் 1 தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அது தேர்தல் காரணமாக ஜூலை 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதுபோல மே மாதம் 18 ஆம் தேதி குரூப் 2 ஏ தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 16 ஆம் தேதி நடைபெறுவதால், அதைத் தொடர்ந்து மே 18 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த குரூப் 2 ஏ தேர்வு ஜூன் மாதம் 29 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+