நாளை குரூப் 4 தேர்வு- வீடியோவில் கண்காணிக்க தேர்வுத் துறை உத்தரவு
நெல்லை: தமிழகத்தில் நாளை குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இதை முழுவதும் வீடியோவில் பதிவு செய்ய தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றனர். இதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.

குரூப் 4 எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நாளை 21 ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வினாத்தாள் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் அனைத்து மாவட்ட கருவூலங்களிலும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேர்வை அமைதியாக நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் கேட்டு கொண்டுள்ளது. இந்த தேர்வை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் அலுவலர்களுடன் ஆலோசனை நடந்தது.
இந்த தேர்வை எதிர்கொள்ளும் தேர்வர்கள் காலை 9.30 மணிக்கே தேர்வு கூடத்தில் ஆஜராக வேண்டும். தேர்வர்கள் தவிர வேறு நபர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அனைத்து தேர்வு மையங்களையும் ஆன்லைன் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும். இந்த தேர்வை எழுதுவதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடிநீர், தடையில்லா மின்சார வசதி போன்றவையும் ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications