டி.என்.பி.எஸ்.சி. புதிய தலைவராக கே. அருள்மொழி நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.யின் தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன் ராஜ்யசபா இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை கடந்த ஜூன் மாதம் அவர் ராஜினாமா செய்தார்.

இதன்பின் தலைவர் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக கே. அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியில் அவர் 6 ஆண்டுகாலம் நீடிப்பார் என தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications