இது போக்குவரத்துக்கழக ஊழல் அதிகாரிகள் பட்டியல்… அதிரடி ரிலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளிக்கிழமை தோறும் புதுப்படங்கள் ரிலீஸ் ஆவதைப் போல ஊழல் அதிகாரிகளின் பட்டியல் ஆங்காங்கே ரிலீஸ் ஆகி வருகிறது. இந்த வார ரிலீஸ் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக, ஊழல் அதிகாரிகளின் பட்டியல். திருப்பூரில் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தினர்.

விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்பட பாணியில் பொதுப்பணித்துறையில் ஊழல் செய்த அதிகாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை காண்டிராக்டர்கள் வெளியிட்டனர்.

TNSTC top ten corruption officials list

இதனையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியல் பேனர் வடிவில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய சில தினங்களுக்குள் கோவை கோட்டத்தில், 10 அதிகாரிகளின் பெயர் பட்டியைலை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தினர் திருப்பூரில் வெளியிட்டுள்ளனர். அதிகாரிகள் ஊழல் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளதாக சட்ட விழிப்புணர்வு இயக்க மாநில செயலர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

அந்த பட்டியலில் A. ராஜேந்திரன், E. தேவராஜன், பால்ராஜ், பாபு, கிருஷ்ணமூர்த்தி கனகவேல், பிரபு, கோவிந்தராஜன், முத்துக்குமாரசாமி, பழனியாண்டி கோவை கோட்ட போக்குவரத்துக்கழகத்தை நாசமாக்கியவர்களின் முதன்மையானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை முதல்வர் ஒ.பன்னீர் செல்வத்தில் துறை என்றால் போக்குவரத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறையாகும். நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+