For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று பணிக்கு திரும்பினால் நடவடிக்கை கிடையாது... அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் இன்று பணிக்கு திரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் கூறியுள்ளார்.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம் செய்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.

TNSTC workers should back to their work today itself- M.R.Vijaya Baskar

இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியிருக்கிறார். அதில் ''போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் முக்கியமாக ''இனி தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படாது'' விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே ''போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பற்றி விவரம் தெரிந்தால் பணிக்கு வருவார்கள்.போக்குவரத்து தொழிலாளர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.'' என்று விஜயபாஸ்கர் பேசியிருந்தார்.

English summary
Bus strike continues for 6th day in Tamil Nadu. Minister M.R.Vijaya Baskar says TNSTC workers should back to their work today itself. He also added that If they came back, no action would be taken against them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X