திமுக பொதுக்குழுவைப் போல அதிரடி முடிவை எடுக்குமா அதிமுக செயற்குழு - பொதுக்குழு?
சென்னை: பரபரப்பான சூழலில் இன்று நடைபெறும் அதிமுக செயற்குழு-பொதுக்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று ஜெயலலிதா திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அதற்கான பணிகளை அக்கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிமுக செயற்குழு- பொதுக்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது. அதில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும் எனத் தெரிகிறது.

அடுத்த பிரதமர்...
இடது சாரிக் கட்சிகள், கொங்குநாடு இளைஞர் பேரவை, இந்தியக் குடியரசுக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டக் கட்சிகள் அதிமுகவோடு தோழமையுடன் இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற நிலையில் இருந்து அதிமுக மாறியதாக தெரிய வில்லை. தற்போதே அடுத்தப் பிரதமர் ஜெயலலிதா தான் என்று அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பேசி வருகின்றனர்.

விருப்ப மனு....
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் தங்களது விருப்ப மனுக்களை இன்று (19ம் தேதி) முதல் கட்சித் தலைமையகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தனித்துப் போட்டி...
மேலும், அனைத்துத் தொகுதிகளிலும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், தனித்துப் போட்டி என்ற நிலையில் இருந்து அதிமுக மாறாது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மற்றொரு கருத்து...
அதேவேளையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. இதற்கு அக்கட்சியின் பிரதம வேட்பாளர் மோடி அலையே காரணமென்று பாஜகவினர் உறுதியாக நம்புகின்றனர். இதனால், அதிமுகவின் நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்ற மற்றொரு கருத்தும் உள்ளது.

முக்கிய அறிவிப்பு....
எனவே, இப்பொதுக்குழுவில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோன்று நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ஜெயலலிதாவிற்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

கூட்டணி முடிவு...
இன்று கூடும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசிக்கப் படுகிறது. தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா என்பது குறித்தும் முடிவு செய்யப் பட உள்ளது.

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு...
மேலும், மின்வெட்டு மற்றும் இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப் படும் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப் படலாம் எனத் தெரிகிறது.

காமன்வெல்த் மாநாடு...
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒரு மனதாகக் கொண்டுவரப் பட்ட தீர்மானத்தை மதிக்காமல், அம்மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப் படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சாதனைகள்...
அதிமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளைப் பாராட்டுதல் போன்ற தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப் படக்கூடும். ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தற்கு ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

எதிர்பார்ப்பு...
பரபரப்பான சூழ்நிலையில் கூடும் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications