ராகுல் காந்தி கைதை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைதை கண்டித்து இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் முன்னாள் ராணுவத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே இவ்விவகாரத்தில் மனமுடைந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷான் கிரிவால் (வயது 70) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் அளிப்பதற்காக நேற்று முன்தினம் ராகுல் காந்தி சென்றார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications