காற்றில் கரைந்தது மெல்லிசை... எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் தகனம்
சென்னை: உடல்நலக் குறைவால் காலமான பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.வியின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சுமார் 1200க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ள பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று காலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.
சாந்தோமில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், இன்று காலை இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை அஞ்சலிக்குப் பின் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. சாந்தோம் வீட்டில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு அவரது உடல் வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.
இறுதி ஊர்வலம் நடைபெற்ற சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் கூடி நின்று எம்.எஸ்.வி.க்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், பெசண்ட் நகர் மின்மயானத்தில் எம்.எஸ்.விஸ்வநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. எம்.எஸ்.வியின் இறுதிச் சடங்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
மறைந்த எம்.எஸ்.விக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இன்று ஒரு நாள் படப்பிடிப்புகளை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
இந்தியன் பாகிஸ்தானில் உளவாளியானால் ஹீரோ.. அவங்க இங்க வந்தா தீவிரவாதியா? துரந்தர் பற்றி அமீர் சர்ச்சை பேச்சு -
பட விழாவில் ஜனநாயகன் மற்றும் துரந்தர் படத்தை விமர்சித்த வெற்றிமாறன்.. இவ்வளவு ஓபனா பேசிட்டாரே! -
Happy Raj Review: ஹேப்பி ராஜ் கதை இதுதான்.. ஆனால் இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறன் ஓபன் ரிவ்யூ -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications