'சூப்பர் ஸ்டார்' ரஜினி பிறந்தநாள்.. களைகட்டும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் #HBDRajinikanth
ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பும் ஒரு சினிமா நட்சதத்திரம் என்றால் அது ரஜினிகாந்த்தான். ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் டிசம்பர் 12-ஆம் தேதி கொண்டாடி மகிழ்கின்றனர்.
பொதுவாக ரஜினி பிறந்தநாளின் போது நலத்திட்ட உதவிகளை ரசிகர்கள் செய்வது வழக்கம். அதாவது ரத்த தான முகாம் நடத்துதல், அன்னதானம், ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் என இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களும் அவரது பிறந்தநாளை கொண்டாடுவர்.

ரசிகர்கள் சந்திப்பு இல்லை
இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. மாறாக மற்றொரு தேதியில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என தெரிகிறது.

ரஜினிக்காக பேனர்கள்
ஊழல் ஆட்சி ஒழியட்டும், காலா ஆட்சி மலரட்டும் என்று ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை அரக்கோணம் ரஜினி நற்பணி இயக்கத்தினர் வைத்துள்ளனர். அதேபோல் கை கோர்த்து நிற்கிறோம், நீ வா தலைவரா என்று வாசகம் அச்சிடப்பட்ட பேனர்களும் கண்களில் படுகின்றன.

நலத்திட்ட விழா
வேலூரை அடுத்த கேவி குப்பத்தில் வைக்கப்பட்ட பேனரில் மக்கள் மனதில் குடியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரு்ம் 15-ஆம் தேதி நலத்திட்ட உதவிகளை செய்யப்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல் குடியாத்தத்தில் அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது.

நீ வருவாய் என
வாலாஜா ரசிகர் மன்றத்தினர் வைத்துள்ள பேனரில் எழுந்து வா தலைவா நீ வருவாய் என மக்கள் எதிர்பார்ப்பு என்று அழைத்துள்ளனர். நாளைய தமிழகமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர் குடியாத்தம் ரசிகர்கள்.

நாளைய முதல்வர்
அதிசய பிறவி ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் நாளைய முதல்வரே என்று ரஜினியை அழைத்துள்ளனர். தமிழ் மண்ணை ஆள போகும் பச்சை தமிழரே என்று அரக்கோணம் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
|
எங்கள் தெய்வமே
மனித உருவில் வாழும் எங்கள் தெய்வமே என்று ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளார். இதேபோல் வெளிநாட்டிலும் ரஜினி பிறந்த நாள் களைகட்டியுள்ளது. அதில் நீங்கள் தமிழனில்லை என்று சொல்ல இங்க சில கூட்டம் உண்டு. உன்னால் தமிழ் கற்ற தேசமோ பல உண்டு என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

போஸ்டர் கொண்ட பேனர்கள்
ரஜினி நடித்து தற்போது வெளியாகவுள்ள காலா படத்தின் போஸ்டரை கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறியுள்ளனர். இன்றைய தினம் ஏராளமான கொண்டாட்டங்களுக்கு தயாராகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதால் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications