முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் நிதியமைச்சர்... பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற வகையில் இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற வகையில் இருப்பதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பால் வளத்துறையில், உண்மைக்கு புறம்பான தகவலை நிதியமைச்சர் பட்ஜெட்டில் கொடுத்துள்ளார் எனவும் அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

கடந்த 2015-2016ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 30.5லட்சம் லிட்டர் பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக அரசின் ஆவின் நிறுவனம் 2016-2017ம் நிதியாண்டில் சுமார் 41லட்சம் லிட்டர் பாலினை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதாக இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இது உண்மைக்கு புறம்பான "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும்"
ஏனெனில் கடந்த 2015-2016ம் நிதியாண்டில் நாளொன்றுக்கு 30.5லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாகவும், தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனத்தோடு போட்டி போட்டுக் கொண்டு பால் கொள்முதல் விலையை ஓரளவுக்கு உயர்த்தி கொடுத்து வருவதாகவும், தனியார் பால் நிறுவனங்களோடு வணிகச் சந்தையில் ஈடு கொடுக்க முடியாததாலும் ஆவின் நிறுவனத்திற்கு வரக் கூடிய பாலின் கொள்முதல் நாளொன்றுக்கு சுமார் 24.5லட்சம் லிட்டராக குறைந்திருக்கிறது.
இந்த நிலையில் உண்மைக்கு புறம்பான தகவலை பட்ஜெட்டில் கொடுத்து பால் வளத்துறைக்கு ஏமாற்றம் தருகின்ற பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications