கருணாநிதி உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி.. பக்கத்தில் முரசொலி!
கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.
Recommended Video

சென்னை: கருணாநிதி உடல் உள்ள கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டது.
கருணாநிதி நேற்று உடல் நல குறைபாடு காரணமாக காலமானார். அவரது உடல் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லங்களில் வைக்கப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ஓமந்தூரார் எஸ்டேட் அருகில் உள்ள ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. அவரது உடல் உள்ள கண்ணாடி பேழையில் இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டுள்ளது.
"தலைவர் கலைஞர் மறைந்தார்" என்ற செய்தி வெளியிடப்பட்ட முரசொலி நாளிதழ் கண்ணாடி பேழையில் கருணாநிதி உடல் அருகே வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமான இடங்கள் முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் ஆகியவை ஆகும்.

ஆட்சியில் இருந்த போது தனது சாதனைகளை பறைசாற்றுவதற்கும் ஆட்சியில் இல்லாத போது ஆளுங்கட்சியின் குறைகளை சுட்டிக் காட்டுவதற்கும் இந்த நாளிதழ் பெரு துணையாக இருந்தது. இந்த நாளிதழில் உடன்பிறப்பே என்ற தலைப்பில் கருணாநிதி எழுதிய கடிதம் பிரபலம் ஆகும்.
நாளை மறுநாள் 77-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது கருணாநிதி தொடங்கிய முரசொலி நாளிதழ். கடந்த ஆண்டுதான் இந்த நாளிதழ் தன் பவள விழாவை கொண்டாடியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications