மகள்களைப் பெற்ற அன்பு அப்பாக்களுக்கு பாடல்களின் சமர்ப்பணம்- உலக மகள்கள் தினம் இன்று!
சென்னை: மகள்கள்.... எப்போதுமே ஆண் குழந்தைகளை விட அப்பாக்களுக்கு பிடித்தது பெண் குழந்தைகள்தான்... அதிலும், அம்மா திட்டினாலும் பெண் குழந்தைகளை அப்பாக்கள் எப்போதுமே விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள்.
மகள்களும் அப்படித்தான் பிறப்பது ஓரிடம்... திருமணத்திற்குப் பின்னர் மிச்ச வாழ்க்கை மற்றொரிடம் என்று இருந்தாலும் இரண்டு குடும்பங்களையும் ஒரு சேர நேசிக்கும் மனம் படைத்தவர்கள் பெண்கள்.
அப்படிப்பட்ட மகள்களை கொண்டாடும் தினம்தான் இன்று... "உலக மகள்கள் தினம்"... பெண் குழந்தைகளின் பெருமையை எடுத்துரைக்கும் சில பாடல்கள் இங்கே உங்களுக்காக படித்து ரசிக்க...

ஆனந்த யாழை மீட்டுகிறாயடி:
"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று" என்று முத்தத்திற்கு அழகான அர்த்தம் சொன்னவர் இயக்குனர் ராம். அவருடைய "தங்க மீன்கள்" திரைப்படம் அப்பாவிற்கும், மகளுக்குமான ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடாக அனைவரையும் கரைய வைத்தது. "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்ற அப்படத்தின் பாடல் மகள்களை நேசிக்கும் பல அப்பாக்களின் செல்போன் ரிங்க்டோன் இன்றும் என்று சொன்னால் மிகையாகது.

ஆரிரோ ஆராரிரரோ இது தந்தையின் தாலாட்டு:
"தெய்வத்திருமகள்" விக்ரமிற்கு எத்தனையோ படங்கள் பெருமையைத் தேடிக் கொடுத்திருந்தாலும் அவரை முழுமையான நடிகராக உணர வைத்த படம்.. மனநிலை குன்றிய பாசமான தந்தைக்கும், வெண்ணிலா போலவே ஜொலிக்கும் அழகான குழந்தையான "நிலா" என்ற மகளுக்கும் இடையேயான பாசப்பிணைப்பினை எடுத்துக் காட்டிய படம்... இந்தப் படத்தில் பாடல்களை விட அவர்களுக்கு இடையேயான பாசம் இழையோடும் போது வெளிப்படும் பின்னணி இசையே அனைவரையும் கவர்ந்திழுத்தது.

உனக்கென்ன வேணும் சொல்லு என் மகளே:
அனோஷ்கா என்ற பெண் குழந்தையின் அப்பாவான நடிகர் அஜித், திரையிலும் அன்பான அப்பாவாக ஜொலித்த திரைப்படம் "என்னை அறிந்தால்". அந்தப் படத்தில் சொந்த மகளாக இல்லாவிட்டாலும் அவ்வளவு அன்பான பாசத்தினைப் பொழியும் அப்பாவாக அவர் வாழ்ந்திருப்பார். "உனக்கென்ன வேணும் சொல்லு" எல்லா மகள்களின் காதுகளிலும் ரீங்காரமாக ஒலிக்கும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா:
பிரகாஷ் ராஜூம், திரிஷாவும் உண்மையிலேயே ஒரு அப்பா, மகள் இருந்தால் எப்படி நண்பர்கள் போல் இருக்க வேண்டும் என்பதைச் சொன்ன ஆழமான திரைப்படம் "அபியும் நானும்"... மகளுக்காக இரவெல்லாம் படிக்கும் தந்தை, காதலித்தவனையே மனம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் மகளுக்காக ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்தினை சரிவர செய்திருப்பார் பிரகாஷ்ராஜ். "வா வா என் தேவதையே" என்ற பாடல் பெண் குழந்தையின் வளர்ச்சியையும் அதைக் கண்டு அப்பாவின் பூரிப்பையும் ஒரு சேர பதிவு செய்திருக்கும்..

அன்பு மகள்களுக்கான தினம்:
சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் முக்கால்வாசி அப்பா-மகள் பாசம் இதைவிட 1000 மடங்கு மேல்தான்... எல்லா மகள்களுக்கும், மகள்களைப் பெற்ற தந்தைகளுக்கும் இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள்....
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications