கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்து.. 12 ஆக உயர்ந்தது பலி எண்ணிக்கை.. உறவினர்கள் பெரும் கவலை
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவர்களதுஉறவினர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 12 ஆகஉயர்ந்துள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் உள்ள மீனாம்பாள் சாலையில் பேக்கரி ஒன்று இயங்கி வந்தது. அந்த பேக்கரியில் கடந்த 15ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்குள்ள கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் 6 போலீசார் உள்பட 48க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர். சிகிச்சைப் பலனளிக்காமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்தனர். அதே போன்று, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உயிரிழந்தார்.
இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த நரேஷ், முத்தமிழ் நகரைச் சேர்ந்த பார்த்திபன் ஆகியோர் நேற்று மரணம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜாஉயிரிழந்துள்ளார். இதனையடுத்து கொடுங்கையூர் தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
கடுமையான தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோர் நாள்தோறும் உயிரிழக்கின்றனர். இன்னும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் உறவினர்களிடையே அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications