மினிலாரி மீது மணல் லாரி மோதி விபத்து... சாலையில் கொட்டிய 2 டன் தக்காளிகள்
கரூர்: கரூர் அருகே பஞ்சர் ஆகி நின்று கொண்டிருந்த தக்காளி பாரம் ஏற்றி நின்ற மினி லாரி மீது மணல் ஏற்ற அதிவேகமாக சென்ற லாரி மோதிய விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 2 டன் மதிப்புள்ள தக்காளிகள் சாலையில் கொட்டி முற்றிலும் நாசமடைந்தன.
கரூரிலிருந்து சித்தலவாய்க்கு தக்காளி லோடு ஏற்றிச்சென்ற மினி லாரி மணவாசி சுங்கச்சாவடி முன்பு உள்ள கே.பி.குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பஞ்சர் ஆனது. இதையடுத்து சாலையோரத்தில் மினிலாரி நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் மணல் அள்ள அதிவேகமாக வந்த மணல் லாரி பஞ்சர் ஆகி நின்ற தக்காளி லோடு லாரி மீது மோதியதில் தக்காளி லாரியில் இருந்த தக்காளிகள் சுமார் 2 டன் மதிப்புள்ள தக்காளிகள் தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தன. இதை அள்ள மக்கள் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து கரூர் ரோந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தக்காளி அள்ளுவதற்கு குவிந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். நான்கு வழிச்சாலையில் உள்ள ஒரு பாதையை மாற்றி மற்றொரு பாதை வழியாக பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களை இயக்க வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாயனூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மணல் லாரி அருகே சாய்ந்ததையடுத்து அங்குள்ள கிரஷர் வைத்து மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் கூடலூர் டூ நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை எண் 67 ல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஊரே சேர்ந்து தக்காளி அள்ளிய கூட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications