தக்காளி விக்கிற விலைக்கு இனி தக்காளி சட்னி வேணும்னு கேப்பியா?
சென்னை: தக்காளி விலை சதமடித்துள்ளதால் அதை வாங்குவதற்கு இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர். வீடுகளிலும், ஹோட்டல்களிலும் தக்காளி சட்னி இருந்த இடத்தை தேங்காய் சட்னியும், வெங்காய சட்னியும் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. தக்காளி விலை ஏற்றம் சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ் ரூபாத்தில் பரவி வருகிறது.
அன்றாட சமையலில் தக்காளி முக்கிய இடம் பிடித்துள்ளது. தக்காளி எண்ணற்ற சத்துக்களை கொண்டது. வைட்டமின் சி சத்து நிறைந்த தக்காளி, இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் பயன்படுகிறது.
சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு. தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள்.
தக்காளியின் நிறமும், உணவிற்கு தரும் கூடுதல் சுவையினாலும் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியின் விலை ஏற்றம் இறக்கம் கொண்டது.
தக்காளியின் விலை கிலோ 5 ரூபாய்க்கும் விற்பனையாகும்... திடீரென்று 100 ரூபாய்க்கும் விலை உயரும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புவரை தக்காளி கிலோ 5ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக சதமடித்துள்ளது தக்காளி விலை. இந்த விலை உயர்வு இன்னும் ஒருமாத காலத்திற்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் சமூகவலைத்தளங்களில் தக்காளி மீம்ஸ் பிரதான இடம் பிடித்துள்ளது.
|
என்னத்த சொல்ல
தக்காளி விக்கிற விலைக்கு ஏழைங்க தான் சட்னி ஆகுறாங்க என்னத்த சொல்ல என்கிறார் இந்த வலைஞர்.
|
தேங்காய் சட்னி
வீட்டில் இட்லி, தோசைக்கு தக்காளி சட்னி கேட்டால் இனி இந்த ரியாக்சன்தான்போல.
|
புளியின் அருமை
நிழலின் அருமை வெயிலில் தெரியும்... அதுபோல புளியின் அருமை தக்காளி விலை ஏற்றத்தில் தெரியும். எனவே தக்காளி விலை ஏறினால் புளிதான் மாற்று என்கிறார் இந்த வலைஞர்.
|
அதுதான் நடக்காது
தக்காளி சட்னி இல்லைன்னா என்ன? தேங்காய் சட்னி இருக்கே என்று ஆறுதல் பட்டுக்கொள்கிறார் இந்த வலைஞர்.
|
வீட்டிலும் நோ தக்காளி
தக்காளி விலை செஞ்சுரி அடிச்சிருச்சி அதான் வீட்ல தக்காளி நடமாட்டத்தையே காணோம் என்கிறார் இந்த வலைஞர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications