பூரண மதுவிலக்குக் கோரி காங்கிரஸ் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்தக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில் நவம்பர் 2-ம் தேதி காலை 10 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொள்கின்றனர்.
இந்த போராட்டத்துக்கு, சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் என்.ரங்கபாஷ்யம், ராயபுரம் ஆர்.மனோ, கராத்தே ஆர்.தியாகரஜன் மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.ஆர்.சிவராமன் மற்றும் திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பூவை ஜேம்ஸ், திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் (பொறுப்பு) ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications