அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்றே துவங்கிய மகன் துரை தயாநிதி
மதுரை: மு.க. அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவரது மகனும், சினிமா தயாரிப்பாளருமான துரை தயாநிதி இன்றே துவங்கிவிட்டார்.
திமுத தலைவர் கருணாநிதி தனது மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கினார். இந்நிலையில் தனது தந்தைக்கு ஆதரவாக துரை தயாநிதி ட்விட்டரில் கருத்துகள் தெரிவித்துள்ளார்.
அழகிரியின் 63வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் வேளையில் தான் இத்தனை பிரச்சனைகளும் நடந்துள்ளன. இந்நிலையில் இந்த பிறந்தநாள் விழாவை தனது பலத்தை காட்டும் விழாவாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார் அழகிரி.

இதற்கிடையே அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இன்றே துவங்கிவிட்டார் துரை தயாநிதி. மதுரை அருகே இருக்கும் முத்துப்பட்டியில் இன்று இலவச மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார். பின்னர் பசுமலையில் உள்ள இன்ப இல்லம் என்னும் முதியோர் இல்லத்திற்கு மாருதி ஓம்னி வேன் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
இதையடுத்து பைக்காராவில் நடந்த கொடியேற்று விழாவில் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசினார். அழகிரி வீட்டுக்குள் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருக்க அவரது மகன் வெளியே தடபுடலாக செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications