2015ல் கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட பாகுபலி: சினிமா தேடலில் நம்பர் 1
சென்னை: 2015ம் ஆண்டுக்கான கூகுள் இந்தியாவின் மொத்த தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தையும், திரைப்படங்களின் பெயர் தேடலில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது.
கம்ப்யூட்டரில் தேடலுக்கு உதவி செய்து முன்னணியில் இருக்கும் கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இதுதொடர்பான பட்டியலை சினிமா, பிரபலங்கள், நடிகர், நடிகைகள் என மொத்தம் 8 பட்டியல்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் பாகுபலியின் சாதனை தெரியவந்துள்ளது.

ராஜமௌலியின் பாகுபலி
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. மரகதமணி இசையமைத்த அப்படத்துக்கு செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவான இப்படம் இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது.

கூகுள் டிரெண்டிங் 2
இந்தியப் திரைப்படங்கள் வசூலில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ள பாகுபலி, கூகுளின் டிரண்டிங் தேடலில் இரண்டாம் இடத்திலும், 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் இடத்திலும் உள்ளது.

சினிமா பிரிவில் நம்பர் 1
2015 ஆண்டுக்கான மொத்த கூகுள் தேடலில் 'பாகுபலி' இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. அதுமட்டுமன்றி கூகுள் தேடலின் படங்களின் பிரிவில் 'பாகுபலி' முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது.

பாகுபலியின் சாதனை
இந்தியில் வெளியான பஜ்ரங்கி பைஜான் மற்றும் பிரேம் ரத்தன் தன் பயோ படங்கள் சினிமாவில் 2 மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளன. இந்திய அளவில் தேடப்பட்டவைகளில் 3, 4ம் இடங்களை இந்த படங்கள் பிடித்துள்ளன.

அப்துல்கலாம்
ஐபிஎல் கிரிக்கெட் ஐந்தாம் இடத்தையும், ஏ.பி.ஜெ அப்துல் கலாம் ஆறாம் இடத்தையும், எஸ்.எஸ்.சி தேர்வு 7ம் இடத்தையும் பிடித்துள்ளது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 8ம் இடத்திலும், ஹாட் ஸ்டார் 9ம் இடத்தையும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பத்தாம் இடத்தையும் பிடித்துள்ளது.

டுவிட்டரில் அறிவிப்பு
பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் துவங்கப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், 2015 ஆண்டுக்கான கூகுள் தேடலிலும் 'பாகுபலி' சாதனை படைத்திருக்கிறது. இத்தகவலை 'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். இதே போன்று 2015ம் ஆண்டுக்கான ஃபேஸ்புக் தேடலில் பாகுபலி 4ம் இடத்தை பிடித்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications