சுற்றுலா பயணிகளுக்கோர் நற்செய்தி... குற்றால அருவிகளில் குதூகல கும்மாளம் போட அனுமதி!
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லைமாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்தது. இம்மழையின் காரணமாக 17ஆம் தேதி அதிகாலை முதல் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர்வரத்து அதிகரித்து வெள்ளம் உருவாகி சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் குளிக்க போலீசார் தடைவிதித்தனர்.

இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்ததைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான மக்கள் திரண்டு வந்து குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.
மேலும் சபரிமலையில் ஐயப்பான் கோவில் நடைதிறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்களும் திரண்டுவந்து குளித்து அருவியின் அழகை ரசித்து வருகின்றனர். மேலும் இன்று புரட்டாசி மஹாளய அமாவாசை என்பதால் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications