அருவிகளில் ஆர்பரிக்கும் தண்ணீர் களைகட்டும் குற்றால சீசன்... குவியும் சுற்றுலா பயணிகள்
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் சாரல் மழையுடன் ரம்மியமான சீசன் துவங்கும். ஜூன் தொடங்கி ஆகஸ்ட் வரை சீசன் களைகட்டும். இந்த ஆண்டு வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் சற்று தாமதமாக 17 நாட்களுக்கு பிறகு சீசன் துவங்கியது.
ஆரம்ப நாளிலேயே அமர்களமாக தொடங்கிய சீசன் தற்போது களைகட்டியுள்ளது. கடந்த இரு தினங்களாக குற்றாலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருவதுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.

கொட்டும் தண்ணீர்
குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

பழைய குற்றாலத்தில் தண்ணீர்
தென்காசி,செங்கோட்டை,குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை தொடர்ந்து பெய்ததால் பழைய குற்றாலத்திலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி
ஐந்தருவியின் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் விழுவதால் குற்றாலத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளின் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

குவியும் பயணிகள்
இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதையடுத்து அங்கு வியாபாரமும் சூடு பிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications