பாபநாசம், மணிமுத்தாறு, குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை
நெல்லை: மலைப் பகுதிகளில் மழை குறைந்தும், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளம் குறையாத காரணத்தால், பாபநாசம், மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீடிக்கிறது. குற்றாலம் அருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து கணிசமாக நீர்வரத்து இருந்ததால், அணைகளில் இருந்து உபரிநீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

பாபநாசம் கல்யாணதீர்த்த அருவி, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்தபோதிலும் அருவிகளில் வெள்ளம் குறையவில்லை. செவ்வாய்க்கிழமையும் அருவிகளில் நீர்வரத்து கணிசமாக இருந்தது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல் பொது மக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications