டிரான்ஸ்பார்மரில் அரசுப் பேருந்து மோதி விபத்து - 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
நெல்லை: நெல்லையில் சாலையோரமாக இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பயணிகள் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
நெல்லை பேருந்து நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் சேரன்மகாதேவிக்கு தடம் எண் 36 என்ற எண்ணுள்ள டவுண் பஸ் புறப்பட்டது. இந்தப் பேருந்து நெல்லை மேம்பாலத்தைக் கடந்து எஸ்.என்.ஹை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

பேருந்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 40 பேர் இருந்துள்ளனர். அப்போது ஓட்டுனரின் கவனக் குறைவால் பேருந்து நிலைதடுமாறி சாலையின் ஓரத்திலிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதியது.

இதனை சற்றும் எதிர்பாராத பயணிகள் அலறினர். இதில் பேருந்தின் முன் பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமும், உள்ளிருந்தவர்கள் சிறுகாயமும் அடைந்தனர்.

காயம்பட்டவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மின் கம்பத்தில் பேருந்து மோதிய சமயம் வயர்கள் அறுந்து விழவில்லை. இதனால் பேருந்திலிருந்த 40 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்குப் பின்னர் ஓட்டுனரும்,நடத்துனரும் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications