For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய கம்யூ.கட்சிக்கு இன்னோவா கிரிஸ்டா கார்... எளிமையா? பெருமையா?

Google Oneindia Tamil News

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் பயன்பாட்டிற்காக அக்காட்சி சார்பில் இன்னோவா கிரிஸ்டா ஹை எண்ட் மாடல் கார் வாங்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுகவுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் அண்மைக்காலமாக அமைந்துள்ளன.

பொலிரோ, டாடா சுமோ போன்ற வாகனங்ளில் அதிகத் தூரம் பயணம் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், உடல்சோர்வு உள்ளிட்ட அசவுக்கரியங்களை தவிர்ப்பதற்காகவே இன்னோவா கிரிஸ்டா கார் வாங்கப்பட்டதாகவும் இந்திய கம்யூ.தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

தன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணி தன்னை விவசாயி என்கிறார் எடப்பாடியார்.. ஹைட்ரோ கார்பனை அனுமதிக்க மாட்டார் என நம்புகிறோம்.. அன்புமணி

எளிமை

எளிமை

எளிமையின் உருவமாகவும், பட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனாகவும் பார்க்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அண்மைக்காலமாக ஆடம்பர செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் திமுக, அதிமுகவுக்கு கூட இல்லாத வகையில் மிகப்பெரிய, பிரம்மாண்ட கட்சி அலுவலகத்தை வைத்திருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட். தியாகராயர் நகரில் உள்ள அந்தக் கட்டிடம் ரூ.13 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம். முத்தரசனுக்கு முன்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியன் காலத்தில் அது கட்டப்பட்டது.

திசைமாறுகிறது

திசைமாறுகிறது

அப்போதே, இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் முழு நேர ஊழியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாலன் இல்லத்தின் வரலாறை தா.பாண்டியன் மறைக்கப்பார்க்கிறார் என்றும், தனது காலத்தில் கட்டப்பட்ட கட்சி அலுவலகம் மூலம் தனது பெயர் நிலைத்திருக்க அவர் வழியமைத்துள்ளார் எனவும் அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், கட்சிக்கு வருவாயை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தான் அடுக்குமாடி கட்டிடம் கட்டியதாகவும், கட்சி பயன்பாட்டுக்கு போக மீதமுள்ள தளங்களை வாடகைக்கு விடுவதால் நிரந்தர வருமானம் வரும் என்றும் பாண்டியன் விளக்கினார்.

சொகுசு கார்

சொகுசு கார்

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கென சொந்தமாக வாகனம் வாங்கப்படுவது காலம் காலமாக உள்ள நடைமுறையாகும். எப்போதும் எளிய முறையில் விலை குறைவான வாகனங்களே வாங்கப்படும், பின்னர் ஒரு கட்டத்தில் அவை விற்கப்பட்டு புதிய வாகனங்கள் வாங்கப்படும். உதாரணத்துக்கு பொலிரோ போன்ற அடக்கமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது டொயோட்டா நிறுவனத்தயாரிப்பான இன்னோவா கிரிஸ்டா கார் வாங்கப்பட்டுள்ளது. அதுவும் ஹை எண்ட் மாடல் ரகம். அதன் விலை எப்படியும் ரூ.28 லட்சத்தை நெருங்கும்.

அசவுகரியம்

அசவுகரியம்

இது தொடர்பாக இந்திய கம்யூ. முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, இப்போதுள்ள அரசியல் சூழல் வேறு, அந்தக்காலத்தில் இருந்த அரசியல் சூழல் வேறு. இப்போது அதிகம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்கள், கூட்டணிக் கட்சி நிகழ்ச்சிகள் என பல இடங்களுக்கும் ஆயிரக்கணக்கான கி.மீ.தொலைவுகளுக்கு மாநிலச் செயலாளர் செல்ல வேண்டியுள்ளது. இதன் காரணமாக உடல்சோர்வு, அசவுகரியங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும், இந்த கார் வாங்கப்பட்டதே தவிர, ஆடம்பரம் என்ற வார்த்தைக்கே இடமில்லை எனக் கூறினார்.

English summary
Toyota Innova Crysta Car for Communist Party ofIndia
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X