தஞ்சை திமுக, அதிமுக வேட்பாளர்கள், புதுவையில் நாராயணசாமி வாக்குப்பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, மத்திய அமைச்சர் நாராயணசாமி அதிமுக வேட்பாளர் பரசுராமன், ஐ.ஜே.கே. தலைவர் பச்சைமுத்து ஆகியோர் காலையிலேயே வாக்களித்தனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. தஞ்சையில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு, அதிமுக வேட்பாளர் பரசுராமன், முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ஆகியோர் இன்று காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர்.
புதுவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான நாராயணசாமியும் வாக்குப்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே வாக்களித்தார்.
அரசியல் தலைவர்கள் வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து வாக்களித்து வந்தனர்.












Click it and Unblock the Notifications