மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம்.. 13, 14ல் போக்குவரத்து மாற்றம்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, மார்ச் 13,14-ஆம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா இந்த மாதம் 7 முதல் 16 வரை நடைபெறுகிறது. இதில் தேரோட்டம் நடைபெறும் 13-ஆம் தேதி அன்று காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும் 14-ஆம் தேதி அன்று நண்பகல் 2 மணிக்கு தொடங்கி நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் போக்குவத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த நாள்களில் கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வாகனங்கள் கோயிலை நோக்கி வர அனுமதிக்கப்படமாட்டாது.
வாகனங்கள் செல்ல தடை:
கச்சேரி சாலையிலிருந்து மத்தள நாராயணன் தெரு வரை, சித்ரகுளம் கீழ் தெருவிலிருந்து சித்ரகுளம் வடக்கு தெரு வரை, நடுத் தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவிலிருந்து கிழக்கு மாட தெரு வரை, ஆர்.கே. மடம் சாலையிலிருந்து தெற்கு மாடத் தெரு வரை, புனிதமேரி சாலையிலிருந்து ஆர்.கே. மடம் சாலை சந்திப்பு வரை, டாக்டர் ரங்கா சாலையிலிருந்து வெங்கடேச அக்ரகாரம் சாலை வரை, லஸ் சந்திப்பிலிருந்து ஆர்.கே. மடம் சாலை வரையிலும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும்.
போக்குவரத்து மாற்றம்
இதேபோல ராயப்பேட்டை நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலையிலிருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையார் செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, டிசில்வா சாலை, பக்தவச்சலம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, சி.பி இராமசாமி சாலை, புனித மேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.
மாற்றுப்பாதைகள்
அடையாரிலிருந்து ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை, மந்தைவெளி, வி.கே.அய்யர் சாலை, சிருங்கேரி மடம் சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, லஸ் சர்ச் சாலை, கற்பகம்மாள் நகர், விவேகானந்தா கல்லூரி, பி.எஸ். சிவசுவாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ்ûஸ அடையலாம்.

பேருந்து நிறுத்தம் மாற்றம்
மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மயிலாப்பூர் கோயில் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்கு அருகில் மாற்றப்படும். இதேபோல திருவிழா நாள்களில் தேவைப்படும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
வாகனங்கள் நிறுத்த தடை
இம் மாதம் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் சந்நிதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணமடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதி கிடையாது.
அந்த நாள்களில் கிழக்குப் பகுதியிலிருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சர்ச் சாலை, காமதேனு கல்யாண மண்டபத்தின் (தியேட்டர்) எதிரே உள்ள பகுதிகளில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல மேற்கிலிருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோயில் அருகிலும், வெங்கடேச அக்ரஹாரம் திருமயிலை பறக்கும் ரயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழேயும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications