ராதாகிருஷ்ணன் நகரைக் கலகலகலக்க வைத்த "எம்.ஜி.ஆர்" ராமசாமி!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி சுயேட்சையாக போட்டியிடுகிறார். அதிமுகவினர் ஒருபக்கம்ி படை பலத்தோடு பிரசாரம் செய்து வருவதைப் பொருட்படுத்தாமல், அவரும் தன்னால் முடிந்தவரை அசத்தி வருகிறார்.
அவர், திங்கள்கிழமை சைக்கிள் ரிக்சாவை ஓட்டியபடியே பிரச்சாரம் செய்தார். அப்போது எம்ஜிஆர் அணிந்திருந்தது போலவே தொப்பி, சால்வை, கண்ணாடி ஆகியவற்றை அணிந்து வாக்கு சேகரித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், ஆர்கே நகருக்கு உட்பட்ட வ.உ.சி.நகரில் இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய டிராபிக் ராமசாமி எம்ஜிஆர் கெட்டப்பில் தொப்பி, துண்டு அணிந்தபடி ரிக்ஷா வண்டியை ஓட்டிய படி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
எம்ஜிஆர் கெட்டப்பில் பிரசாரத்தை தொடங்கினார் டிராபிக் ராமசாமி! (படங்கள்) http://t.co/9Cig062fkE pic.twitter.com/1FxHCbJnhs
— விகடன் (@vikatan) June 15, 2015 மேலும், தனது சின்னமான கேமிராவை காட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சைக்கிள் ரிக்ஷாவில் காந்தி வேடமிட்ட ஒருவர் அமர்ந்திருந்தார். அவரும் டிராபிக் டிராமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று அவர் வாக்குகளை சேகரித்து வருகிறார்.
டிராபிக் ராமசாமியின் இந்த அதிரடி பிரசாரத்தால் தொகுதி மக்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதேசமயம், எம்ஜிஆர் வேடம் போடாமல் இவரைத் தடுப்பது எப்படி என்ற யோசனையில் அதிமுகவினர் மூழ்கியிருப்பதாக தெரிகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications