ஊருக்குபோன மக்கள் மொத்தமாக திரும்பியதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னை: பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மொத்தமாக சென்னை திரும்பியதால் பெருங்களத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் இருந்து கல்வி கற்கவும், தொழில் நிமித்தமாகவும், பணி புரிவதற்கு என்பன உள்ளிட்ட பல காரணங்களுக்காக தினமும் ஏராளமானோர் சென்னையில் வந்து குடியேறுகிறார்கள்.
பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு இவர்கள் சென்று திரும்புவது வழக்கம்.

3 நாட்கள் விடுமுறை
இவ்வாண்டு பொங்கல் திருநாள், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. எனவே பலரும் புதன்கிழமை இரவே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் விழாக்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முடிந்துவிட்டதால், சொந்த ஊர்களில் இருந்து திங்கள்கிழமையான இன்று சென்னை வந்தடையும் வகையில் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சிறப்பு பஸ்கள்
மக்களின் வருகைக்காக சிறப்பு பஸ்களை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்கிவருகிறது. பொங்கல் பண்டிகைக்காக 6,832 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதுதவிர, சொந்த கார்கள், வாடகை கார்களில் சென்னை திரும்பும் மக்களும் அதிகம்.

அதிகாலையில் டிராபிக் ஜாம்
இதனால் இன்று அதிகாலை முதலே சென்னையின் பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீசார் பெரு முயற்சி
பேருந்துகளை நீண்ட நேரம் நிற்க அனுமதி மறுத்தும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் பலவிதமான போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
