ஆர்.கே.நகரில் ‘டிராபிக் ஜாம்’ ஏற்படுமா ?... ஸ்டாலினை சந்தித்தார் (டிராபிக்) ராமசாமி!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் ஆதரவு கோரினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளன. அதிமுக சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். மற்ற கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் அறிவிக்க வில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு கோர இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார் டிராபிக் ராமசாமி.
அப்போது, ‘சென்னை ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், அதற்கு திமுக ஆதரவு அளிக்க வேண்டும்' ஸ்டாலினிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 'திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆலோசித்தப் பின்னரே ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications