டிராபிக் ராமசாமிக்கு 'மீம்ஸ் கிரியேட்டர்'கள் தேவையாம்.. யாராச்சும் இருக்கீங்களா?

மீம்ஸ் கிரியேட்டர்கள் யாரேனும் இருந்தால் தன்னைத் தொடர்பு கொள்ளுமாறு சமூக சேவகர் டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக சேவகர் டிராபிக் ராமசாமி தனது பேஸ்புக் பக்கத்தில் யாராவது மீம்ஸ் கிரியேட்டர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வருபவர் ராமசாமி. சென்னை உயர்நீதிமன்றம் தான் கிட்டத்தட்ட இவரது வீடு போல. அங்கேயேதான் எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பார் வழக்குகள் தொடர்பாக. பல்வேறு முக்கிய வழக்குகளைப் போல அரசுகளையும், தவறு செய்பவர்களையும் திணறடித்து வருபவர் டிராபிக் ராமசாமி.

Traffic Ramasamy wants memes cretaors!

சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து பகிரங்கமாக தெரிவிக்கக் கோரி வழக்குப் போட்டு அதிர வைத்தார். தேர்தலிலும் போட்டியிட்ட அனுபவம் இவருக்கு உண்டு.

இந்த நிலையில் அவரது முகநூல் பக்கத்தில் மீம்ஸ் கிரியேட்டர் யாராவது இருந்தால் உள் டப்பிக்குள் வருமாறு கூறி ஒரு மெசேஜ் போட்டுள்ளார். எதற்காக என்றுதான் தெரியவில்லை.

இடைத் தேர்தல் தொடர்பாக அல்லது அதிமுக ஆட்சி தொடர்பாக நக்கலடித்து மீம்ஸ் போடப் போகிறாரா என்றும் தெரியவில்லை. "டிராபிக் மீம்ஸில்" சிக்கி "ஜாம்" ஆகப் போவது யாரோ!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+