20ம் தேதி வரை இங்கதான் இருப்பேன்.. மதுரையைக் கலக்கும் "டெர்ரர் மேன்" டிராபிக் ராமசாமி!
மதுரை: 20ம் தேதி வரை இங்கேதான் இருப்பேன். முறைகேடுகள் அனைத்தையும் களையும் வரை இங்கிருந்து போக மாட்டேன் என்று பிரபல சமூக நல சேவகர் டிராபிக் ராமசாமி கூறியுள்ளதால் மதுரையில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
சென்னையை மட்டுமே கலக்க வந்த டிராபிக் ராமசாமி இப்போது தமிழகம் முழுவதும் தனது அதிரடிக் கரங்களை வியாபிக்கத் தொடங்கி விட்டார். தற்போது மதுரைக்கு வந்துள்ள அவர் அங்கு அதிரடியாக செயல்பட்டு வருவதால் அதிமுகவினரும், காவல்துறையினரும் டென்ஷனாக காணப்படுகின்றனர்.
ஆனால் சட்ட ரீதியான பாதுகாப்புடன் பக்காவாக களம் இறங்கியுள்ள ராமசாமிக்கு எதிராக சுண்டு விரலைக் கூட அசைக்க முடியாது என்பதால் அதிமுகவினர்தான் செம காட்டமாக காணப்படுகின்றனர்.

மதுரைக்கு வந்துள்ள டிராபிக் ராமசாமி அங்கு அனுமதியில்லாமல் ஓட்டப்பட்டு வரும் ஆட்டோக்களைப் பறிமுதல் செய்து அதிரடியை ஆரம்பித்தார். இதனால் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் சட்டரீதியாக முறைப்படி செயல்பட்ட டிராபிக் ராமசாமியுடன் ஒத்துழைத்து செயல்பட்டாக வேண்டிய நிலை போலீஸாருக்கு. இதனால் சட்டத்திற்குப் புறம்பாக ஓடிக் கொண்டுள்ள ஆட்டோக்களை போலீஸார் பறிமுதல் செய்ய நேரிட்டது.
அடுத்து நேற்று தமுக்கம் மைதானத்திற்குப் போன டிராபிக் ராமசாமி அங்கு பெரிய சைஸில் கட்டப்பட்டிருந்த அதிமுக பேனரைப் பார்த்தார். உடனடியாக போலீஸார் விரைந்து வந்தனர். அவர்களிடம் இது சட்டத்திற்குப் புறம்பாக வைக்கப்பட்டுள்ளது. தூக்குங்கள் என்றார். உடனடியாக அதிமுகவினருக்குத் தகவலைச் சொன்னார்கள் போலீஸார்.
ஆனால் அதிமுகவினர் ஆடி அசைந்து வர ரொம்ப லேட்டானது. கோபம் கொண்ட ராமசாமி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தார். அப்போது அங்கு வந்த அதிமுகவினர், ஏக வசனத்தில் ராமசாமியிடம் பேசி வாக்குவாதத்தில் இறங்கினர். ஆனால் போலீஸார் தலையிட்டு அதிமுகவினரை அடங்குமாறு பணித்தனர். வேறு வழியில்லாமல் அதிமுகவினர் தாங்கள் வைத்த பேனரை அப்புறப்படுத்தி கொண்டு சென்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, 20ம் தேதி வரை இங்கதான் இருப்பேன். எல்லா சட்டமீறல்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். சட்டத்திற்குப் புறம்பாக, கோர்ட் உத்தரவுக்குப் புறம்பாக பேனர் வைக்க அனுமதித்துள்ளனர். இதற்காக கலெக்டர், கமிஷனர் ஆகியோர் மீது கேஸ் போடப் போகிறேன் என்றார் ராமசாமி.
அடிச்சுத் தூள் கிளப்புங்க!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications